search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை தண்டனை"

    • மங்களூருவில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது.
    • முகமது ஷபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மங்களூருவில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயிலில் திரூரில் இருந்து பாலக்காடு வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக வல்லபுழாவை சேர்ந்த முகமது ஷபி (வயது 30) என்பவர் பிடிபட்டார். அவருக்கு ரெயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்தும் அதனை கட்டத்தவறிய அவர், வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து அவரை ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம், ரெயில்வே அதிகாரிகள் ஒப்படைத்தனர். தொடர்ந்து முகமது ஷபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து ஷோரனூர் ரெயில்வே நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.
    • வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 மற்றும் 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவரது கணவருக்கு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டது.

    இதனால் அந்த பெண், தனது கணவரை பிரிந்துசென்றார். அவர் தனது காதலன் சிசுபாலன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அந்த பெண், 7 வயதான தனது இளைய மகளை மட்டும் தன்னுடன் வைத்திருந்தார். அப்போது அந்த பெண்ணின் காதலன், பெண்ணின் இளைய மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

    இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, அதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் மூத்த மகள் தாய் மற்றும் சகோதரி தங்கியிருந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

    அப்போது அவரிடம் தனக்கு நேர்ந்த விஷயங்களை சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அதுபற்றி தனது பாட்டியிடம் கூறினார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, பள்ளிக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சிசுபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை நடந்துவந்த போதே, சிசுபாலன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமியின் தாய் மீதான வழக்கு விசாரணை மட்டும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் அவருக்கு ரூ20ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் இரு மகள்களும் தற்போது காப்பகத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் அ.ம.பரமசிவம்.
    • கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பரமசிவம் மரணம் அடைந்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் அ.ம.பரமசிவம்.

    இவரும், இவரது மனைவி நல்லம்மாளும் வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.38 லட்சத்துக்கு சொத்துச் சேர்த்ததாக 1997-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, பரமசிவத்துக்கு 2 ஆண்டு, அவரது மனைவி நல்லம்மாளுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2000-ம் ஆண்டு பரமசிவம் நல்லம்மாள் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு சுமார் 23 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பரமசிவம் மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தார். மேலும் இவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக 417 சதவீதம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த ஓராண்டு சிறை தண்டனையை நல்லம்மாள் அனுபவிக்க வேண்டும்.

    இதற்கு முன்பு அவர் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால் அந்த காலத்தை தண்டனையில் இருந்து கழிக்க வேண்டும். மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி கூறியுள்ளார்.

    • குழந்தையின் நிலையைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • குற்றவாளிக்கு 26 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

    கன்னோஜ்:

    உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50 வயது ஆசாமி ராஜேஷ் ஜாதவ் என்ற மகாத்மா.

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 3 வயது பெண்குழந்தையை கடத்திச்சென்று, அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கற்பழித்துவிட்டார்.

    அந்த குழந்தையின் நிலை மோசமடைந்ததால் அதை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

    குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டு அங்கு சென்ற குடும்பத்தினர், அதன் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ராஜேஷ் ஜாதவ் பின்னர் கைது செய்யப்பட்டார். சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், ராஜேஷ் ஜாதவ் குற்றவாளி என 'போக்சோ' சட்ட சிறப்பு நீதிபதி அல்கா யாதவ் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார்.

    அவர் குற்றவாளிக்கு 26 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரத்து 500 அபராதமும் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் அவர் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
    • சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.

    சிங்கப்பூர்:

    இந்தியாவை சேர்ந்த சின்னையா (வயது 26) என்பவர் சிங்கப்பூரில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், பல்கலைக்கழக மாணவியை கற்பழித்த வழக்கில் சின்னையா கைது செய்யப்பட்டார்.

    அந்த மாணவி, சம்பவத்தன்று இரவு பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்ற போது, அவரை சின்னையா வனப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மாணவியை அவர் கடுமையாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

    மாணவியின் முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் தனது காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு வந்து மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

    சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார். சின்னையாவின் மனநிலையை பற்றி பல மனநல மதிப்பீடுகள் தேவைப்பட்டதால் இவ்வழக்கு விசாரணைக்கு நான்கு ஆண்டுகள் ஆனது என்று கோர்ட்டு தெரிவித்தது.

    • தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
    • ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும்.

    சென்னை:

    நடிகை ஜெயபிரதா, சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

    இதுகுறித்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    கீழ் கோர்ட்டு தண்டனையை நிறுத்திவைக்க கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஜெயபிரதா உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.37 லட்சத்து 68 ஆயிரத்தை செலுத்த முடியுமா? என்று ஜெயபிரதா தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    ஆனால், ரூ.20 லட்சம் செலுத்துவதாக ஜெயபிரதா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கு இ.எஸ்ஐ. தரப்பு வக்கீல் டி.என்.சி.கவுசிக், எதிர்ப்பு தெரிவித்துவாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், "கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜெயபிரதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய பின்னர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கீழ் கோர்ட்டு நிறுத்திவைக்கலாம். இல்லை யென்றால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை கைது செய்தனர்.
    • குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் உறவினருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 80 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, கடந்த 2020-ம் ஆண்டு உறவினர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு இடுக்கி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வர்க்கீஸ் தீர்ப்பு கூறினார்.

    அதில் குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் ஆண் உறவினருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 80 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.40ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்காக சிறுமிக்கு ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    • புகாரின்பேரில் பிரகாஷ்குமாரை அடூர் போலீசார் கைது செய்தனர்.
    • வழக்கு விசாரணை அடூர் விரைவு கோர்ட்டில் நடந்துவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பன்னிவிழா பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்குமார்(வயது43). இவர் கடந்த 2020-ம் ஆண்டு, வாடகைக்கு வீடு பார்த்து தங்கவைத்த ஒரு பெண்ணின் மகனான 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகாரின்பேரில் பிரகாஷ்குமாரை அடூர் போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கு விசாரணை அடூர் விரைவு கோர்ட்டில் நடந்துவந்தது.

    இந்தநிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ்குமாருக்கு இயற்கைக்கு மாறான உறவு வைத்தல், போக்சோ, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சமீர்தான் தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    • குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்கீஸ் உத்தரவிட்டார்.
    • சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் 17 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அந்த சிறுமியை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். இது தொடர்பான வழக்கு அங்குள்ள விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்கீஸ் உத்தரவிட்டார். சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.
    • தண்டனை விவரம் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று இருவரையும் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார்.

    சென்னை:

    கடந்த 1991-96ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திர குமாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ணன். இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து, 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வெங்கடகிருஷ்ணனும், மஞ்சுளாவும் வருமானத்துக்கு அதிகமாக 700 சதவீதம் சொத்துக்கள் சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளதாக கூறி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    மேலும், தண்டனை விவரம் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று இருவரையும் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான இருவரிடமும், தண்டனை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியபோது, குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என கோரினர்.

    மேலும், இந்த வழக்கால் 27 ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்ததாகவும், தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், கீழமை நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் வழங்க வேண்டும் என இருவர் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து, வெங்கட கிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும், மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும், கீழமை நீதிமன்றத்தில் சரணடைய அக்டோபர் 25-ந்தேதி வரை அவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • ஒப்பந்ததாரராக இருந்து பணிபுரிந்த ராஜீவ், சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
    • சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ராஜீவ்வுக்கு ரூ.2.10 லட்சம் அபராதமும் விதித்தார்.

    திருவனந்தபுரம்:

    மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் (வயது 28). இவர், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் வீட்டில் கட்டுமான பணி நடந்தபோது, அங்கு ஒப்பந்ததாரராக இருந்து பணிபுரிந்த ராஜீவ், சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில், குற்றம் சாட்டப்பட்ட ஒப்பந்ததாரர் ராஜீவ்வுக்கு 16 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு 25 ஆண்டுகள், குழந்தை மீது கடுமையான பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு 25 ஆண்டுகள், ஒரு குழந்தையை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டுகள், குழந்தையுடன் வெளிப்படையான பாலுறவு மற்றும் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டுகள், கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 2 ஆண்டுகள் என மொத்தம் 61 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

    சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ராஜீவ்வுக்கு ரூ.2.10 லட்சம் அபராதமும் விதித்தார்.

    • சரஸ்வதியும் அவரது மகள் ராணியும் பெரியசாமியிடம் லோன் விஷயமாக கேட்டுள்ளனர்.
    • அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார்.

    உடுமலை:

    உடுமலை தாலுகா மசக்கவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது54).விவசாயம் செய்து வருகிறார்.இவர் தனது குடும்ப நண்பரான உடுமலையில் வசித்து வரும் சரஸ்வதி என்பவரிடம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி அசல் பத்திரத்தை பெற்றுச் சென்று உள்ளார். அதைத் தொடர்ந்து சரஸ்வதியும் அவரது மகள் ராணியும் பெரியசாமியிடம் லோன் விஷயமாக கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர் வங்கியில் கொடுத்தாகிவிட்டது .விரைவில் லோன் கிடைத்துவிடும் என்று தெரிவித்து உள்ளார். அதன் பின்பு எந்த தகவலும் இல்லை. இந்த சூழலில் திடீரென சரஸ்வதியின் பெயருக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் பெரியசாமி வாங்கிய கடனுக்கு சரஸ்வதி ஜாமின் கையெழுத்து இட்டுள்ளதாகவும் நிலுவை கடனை செலுத்துமாறும் தெரிவித்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, ராணி ஆகியோர் பெரியசாமியிடம் இது குறித்து கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர் நான் வாங்கிய கடனை கட்டி உங்கள் பத்திரத்தை மீட்டு கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்து உள்ளார். ஆனால் காலம் கடந்தும் அவர் சொன்னபடி பத்திரத்தை மீட்டுக் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து ராணியும் சரஸ்வதியும் பெரியசாமியிடம் உடனடியாக பத்திரத்தை மீட்டுத் தருமாறு கேட்டு உள்ளனர். அதற்கு அவர் ராணியையும் சரஸ்வதியையும் மிரட்டி அனுப்பி விட்டதாக தெரிகிறது. இது குறித்து ராணி குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அந்த வழக்கு உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார். விசாரணை முடிந்த நிலையில் மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி தீர்ப்பளித்தார். கையெழுத்தை மோசடி செய்து கடன் பெற்ற குற்றத்திற்காக பெரியசாமிக்கு 3 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும்,ரூ 5 ஆயிரம் அபராதமும்,கட்ட தவறினால் 6 மாதம் சாதாரண சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    ×